யாழில் உள்ள சில பாடசாலைகளின் நேரத்தை மாற்ற நடவடிக்கை!


யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தைக் கருத்தில் கொண்டு
, அதற்கு ஏற்ப நெடுந்தீவு பாடசாலைகளின் நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று (மார்ச் 05) நடைபெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பில், இந்த விடயம் முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் புதிய நியமனங்கள் தொடர்பிலும் கவனம்

🔹 நெடுந்தீவு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
🔹 புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது படகு சேவையின் நேரத்திற்கேற்ப நெடுந்தீவு பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றம் செய்யும் விடயத்தை ஆராய்வதாக கல்வி அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.