இலங்கையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை!
இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலைக்குரியதாக அறிவித்துள்ளது.
குறிப்பாக, 15 முதல் 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருளின் பிடியில் சிக்கிச் செல்கிறார்களென தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்ட 162,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மதிப்பீட்டின் அடிப்படையில், நாட்டில் 92,000 முதல் 100,000 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும், சுமார் 350,000 பேர் ஹெரோயினுக்கும், மேலும் 350,000 பேர் கஞ்சாவுக்கும் அடிமையாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக புதிய கணக்கெடுப்பு மேற்கொள்ள தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
