முடிவுக்கு வந்த வைத்தியர்களின் போராட்டம்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நேற்று (12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம், அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இடைநிறுத்தப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன் படி, பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (13) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
கலந்துரையாடல்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஒப்புக்கொண்டு, போராட்டத்தை நிறுத்துவதாக சங்கம் அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
