ஆசிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
தற்போதுள்ள ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளின் அடிப்படையில், மாகாண பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் பெற 21 கடிதங்கள் பரிமாற்றம் செய்யப்படுவதாக கல்வி, உயர்க்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள நிலைகளின் அடிப்படையில், சில மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தேசிய பாடசாலைகளிலிருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது சிக்கலாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
10 வருடங்களாக ஒரே பாடசாலையில் சேவை புரியும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான செயல்முறையும் இத்துடன் மாற்றப்படவுள்ளதாக மதுர செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிரியர்களுக்கு தங்களுடைய வீடுகளிலிருந்து அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்லக்கூடிய வகையில் புதிய இடமாற்ற முறைமை உருவாக்கப்படும் என அவர் கூறினார். இதோடு, அனைத்து ஆசிரியர்களின் பணிபரியும் இடம் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.