பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு




2025ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் விடுமுறை காலத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முடிவடையும். பின்னர், முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என்று கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.