ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்


இன்றைய (12) நாளுக்கான நாணய மாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல், கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 208.83 ரூபாவாக காணப்படுகின்றது, அதேசமயம் அதன் கொள்வனவு விலை 200.34 ரூபாவாக நிலவுகிறது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 328.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 315.60 ரூபாவாகவும் உள்ளது.

இதேவேளை, ஸ்டேர்லிங் பவுண்டின் விற்பனை விலை 389.27 ரூபாவாகவும், கொள்வனவு விலை 375.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதுடன், அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 190.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 181.33 ரூபாவாகவும் இருந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.