ஐயாயிரத்துக்கும் அதிகமானோரை புதிதாக அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரச சேவையில் 5,800க்கும் அதிகமான புதிய நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இதன் படி, எதிர்வரும் நாட்களில் பல்வேறு அமைச்சுகள் மற்றும் மாகாண சபைகளுக்கு பணியாளர்கள் இணைக்கப்படவுள்ளனர்:
- துறைமுகங்கள், சிவில் விமான சேவை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சுக்கு – 909 பேர்
- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சுக்கு – 109 பேர்
- சுற்றாடல் அமைச்சுக்கு – 144 பேர்
- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சுக்கு – 2,500 பேர்
- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சுக்கு – 22 பேர்
- நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு – 185 பேர்
- கடற்தொழில், நீரியல் வளங்கள் அமைச்சுக்கு – 20 பேர்
- பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு – 1,615 பேர்
மேலும், மாகாண மட்டத்திலும் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன:
- ஊவா மாகாண சபைக்கு – 303 பேர்
- மத்திய மாகாண சபைக்கு – 72 பேர்
"இந்த புதிய நியமனங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."
Tags:
இலங்கை செய்தி
