கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்!


ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு 4 ஊழியர்களை நியமித்து, அவர்களை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 18ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.