தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் தரங்கவுக்கு பதவி உயர்வு!
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரரான கோப்ரல் ரூமேஷ் தரங்க, சார்ஜன்ட் (Sergeant) தரத்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவரது சிறப்பான சாதனையை கௌரவிக்கும் வகையில், இந்த பதவி உயர்வு இன்று (05) விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால் வழங்கப்பட்டது.
கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ரூமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
மேலும், அவரது திறமையை பாராட்டும் வகையில் விமானப்படைத் தளபதி அவருக்கு சிறப்பு பணவிருதும் வழங்கினார். அதேவேளை, ரூமேஷ் தரங்கவின் வெற்றிக்கு பங்களித்த அவரது பயிற்றுவிப்பாளர் டோனி பிரசன்ன மற்றும் பிசியோதெரபிஸ்ட் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோருக்கும் பணவிருதுகள் வழங்கப்பட்டன.
இதேவேளை, ஆண்களுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தட்டு எறிதல் (Para Discus Throw) போட்டியில் இலங்கை வீரர் பாலித பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
