2026 ஜூலை மாத VAT மற்றும் SSCL வரி செலுத்துவதற்கான காலக்கெடு அறிவிப்பு!


2026 ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.

குறித்த காலக்கெடுவுக்குள் VAT செலுத்தத் தவறினாலோ அல்லது தாமதமாக செலுத்தினாலோ அபராதம் விதிக்கப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் செலுத்தப்படும் வரித் தொகை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பின்னர் திணைக்களத்துக்கு கிடைத்தால், அது தாமதமான கொடுப்பனவாகவே கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2026 ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகளை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள் இணையவழி முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிடித்தம் செய்யப்பட்ட வரிகளை ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் செலுத்துமாறும் வரி செலுத்துவோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், ஜூலை மாதத்திற்கான சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) ஓகஸ்ட் 20ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.