தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் உயர்வு!


சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால் இன்று (05) தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,132.03 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 60.83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தை விலை உயர்வின் தாக்கத்தால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டலும், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.