தமிழ்நாடு பட்ஜெட் 2026–27: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" மூலம் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பிறப்பைக் கொண்டாடுவதோடு, தாய்மையின் மகத்துவத்தையும் தாய்மாமனின் பாசத்தையும் போற்றும் நோக்கிலும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதுடன், இதனை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.560 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை மேலும் ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
Tags:
இந்திய செய்தி
