உதயநிதி ஸ்டாலின் கைது: அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிரடிப்படையினர் பல பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், உதயநிதி கைது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், அவர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “கைது நடவடிக்கையால் உதயநிதி ஸ்டாலினையோ அல்லது தி.மு.க.வையோ முடக்க முடியாது. சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், உதயநிதி எழுப்பவுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத அச்சத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தி.மு.க. தெரிவித்துள்ளது.
