நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!


நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (ஆகஸ்ட் 04) மூடப்படும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.

கனமழை, மண்சரிவு அபாயம் மற்றும் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளை மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.