பல மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாயம் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு, 2026 ஆகஸ்ட் 06 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் ஆகஸ்ட் 07 ஆம் திகதி காலை 9.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலை 2 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
கண்டி மாவட்டம்:
உடபலத, டோலுவ, மெததும்பர, டெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்கா இஹல கோரளை மற்றும் உடுதும்பர.
கேகாலை மாவட்டம்:
அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை.
நுவரெலியா மாவட்டம்:
நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை.
இரத்தினபுரி மாவட்டம்:
ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.
நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
கேகாலை மாவட்டம்:
கேகாலை.
இரத்தினபுரி மாவட்டம்:
நிவித்திகல மற்றும் குருவிட்ட.
தொடர்ச்சியாக மழை பெய்யும் பகுதிகளில் மண்சரிவு அல்லது பாறைச்சரிவு அபாயத்தை உணர்த்தும் வகையில், மண் மேடுகளில் ஏற்படும் விரிசல்கள், நிலம் தாழ்வடைதல் போன்ற அறிகுறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவசர நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
