4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!


கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, இந்த எச்சரிக்கை இன்று (05) காலை 9.00 மணி முதல் நாளை (06) காலை 9.00 மணி வரை அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.