நாட்டில் டெங்கு பரவல் தீவிரம் – நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,235 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (14) வரையான தரவுகளின்படி, டெங்கு காரணமாக இதுவரை 49 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஜூலை மாதத்தின் முதல் 13 நாட்களிலேயே 14,572 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த மாதத்தில் மட்டும் 21,538 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.