வடமேல் மாகாண இரண்டாம் தவணைப் பரீட்சை – புதிய திகதிகள் அறிவிப்பு!


வடமேல் மாகாணத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் தவணைப் பரீட்சையின் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (15) முதல் ஜூலை 20 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, அவை ஜூலை 21 முதல் ஜூலை 24 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 6 முதல் 9 ஆம் தரங்களுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சை 2026 ஜூலை 9 முதல் 17 ஆம் திகதி வரையும், 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான பரீட்சை 2026 ஜூலை 9 முதல் 20 ஆம் திகதி வரையும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், திட்டமிட்டபடி ஜூலை 15 முதல் 20 ஆம் திகதி வரை பரீட்சைகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வடமேல் மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளரின் தீர்மானத்தின் அடிப்படையில், அந்த நான்கு பரீட்சை நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை இன்று (14) வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.