‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு!
‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன் முதலாம் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களுக்காக 9,357,346,250 ரூபாய் நிதி இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ், 211,647 பயனாளிக் குடும்பங்களுக்காக 2,468,250,000 ரூபாய் நிதி அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் மாத்திரம் இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,224,459 குடும்பங்களுக்கு 11,825,596,250 ரூபாய் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
