பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத தொடக்கத்தில் வெளியாகும்!
அண்மையில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பல்கலைக்கழக நுழைவுக்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.
இவ்விண்ணப்பதாரர்களில் இருந்து 42,937 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் புதிய பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் புதிய கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் வசந்த லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
