ஜூனில் 152 மில்லியன் டொலர்களால் குறைந்த வெளிநாட்டு பணவரவு!


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் மூலம், கடந்த ஜூன் மாதத்தில் நாடு 695 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைப் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் 847 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அந்த வருவாய் 152 மில்லியன் டொலர்களால் குறைந்துள்ளது.

எனினும், 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவணுப்பல்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த மொத்த வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 23.2 சதவீத அதிகரிப்பாகும்.

இதற்கிடையில், 2026 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைப் பெற்றுள்ளது. இருப்பினும், 2025 ஜூன் மாதத்தில் பதிவான 169.5 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுற்றுலா வருவாயும் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.