டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!
நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (25) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டில் மொத்தமாக 80,905 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
மேலும், ஜூலை மாதத்தில் நேற்று (24) வரை மட்டும் 25,530 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
