2024/25 கல்வியாண்டிற்கான மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில்: தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு!


2024/25 கல்வியாண்டிற்கான மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசிலுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவு எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புலமைப்பரிசிலுக்கான இறுதித் தெரிவுப் பட்டியல்கள் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள மாணவர்கள், ஆகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர் https://mahapola.lk/BankApp2025/ என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தங்களது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்தி இணையவழி (Online) பதிவை கட்டாயம் நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2024/25 கல்வியாண்டிற்கான மஹாபொல புலமைப்பரிசிலுக்குத் தெரிவு செய்யப்படாத மாணவர்கள், தங்களது மேல்முறையீடுகளை ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய பல்கலைக்கழகங்கள் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு (UGC) அனுப்பிவைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.