அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை (31) வைப்பிலிடப்படும்!


2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

இதன்படி, அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.

அதன்படி, இரண்டு கட்டங்களிலும் மொத்தம் 698,962 பயனாளிகளுக்காக 3,494,810,000 ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.

உரிய பயனாளிகள் நாளை (31) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.