காவிரி பிரச்சினை எதிரொலி: கர்நாடகாவில் விஜய் போஸ்டரை கிழித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக ஆகஸ்ட் 3ஆம் திகதி பெங்களூருவில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இரு மாநில முதல்வர்களின் சந்திப்புக்கு கர்நாடகாவிலும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டு வரும் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் விஜயின் போஸ்டரை கன்னட அமைப்பினர் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.
Tags:
இந்திய செய்தி
