மெட்ரோ பேருந்துகளுக்கு GPS தொழில்நுட்பம் – பயணிகளுக்கு புதிய வசதி!


பயணிகள் இனி LMT GO மொபைல் செயலி மூலம் மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடங்களையும் வருகை நேரங்களையும் கண்காணிக்க முடியும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வசதியின் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய அவர், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த சேவை மூலம் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களுக்கு எப்போது வந்தடையும் என்பதைப் பயணிகள் அறிந்துகொள்ள முடியும் என கூறினார்.

அத்துடன், இயக்கத்தில் உள்ள பேருந்துகளின் விவரங்கள், கட்டணத் தகவல்கள் மற்றும் பயணத்தின் அடுத்தடுத்த நிறுத்தங்களுக்கான உத்தேச நேரங்களையும் செயலி வழியாகப் பார்வையிட முடியும் என தெரிவித்தார்.

பயணிகளை மேலும் திட்டமிடப்பட்ட, வசதியான மற்றும் நம்பகமான பயண அனுபவத்துடன் இணைப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய சேவையின் பயனைப் பெற, பயணிகள் LMT GO செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.