கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை


கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (31.01.2026) பிற்பகல் முதல் அமலுக்கு வரும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய விபத்துகளை குறைக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.