இலங்கை நிர்வாக சேவையில் 150 புதிய நியமனங்கள் – பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!


இலங்கை நிர்வாக சேவையில் (SLAS) நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 150 பேரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த நியமனங்களுக்கு தேவையான போட்டிப் பரீட்சையை விரைவாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கை நிர்வாக சேவையில் அதிகளவான காலிப் பணியிடங்கள் நிலவுவதால் அரச துறையின் பல்வேறு திணைக்களங்களின் செயற்பாடுகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை கருத்தில் கொண்டு, வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டிப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், உதவிச் செயலாளர் பதவிக்கு 150 புதிய அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.