மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு : இருமாடி வீட்டிற்கு தீ வைத்த கணவரால் பரபரப்பு!


மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கணவர் ஒருவர் தாம் வசித்து வந்த இருமாடி வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் மொரட்டுவ – எகொடஉயன பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் மேல் மாடியில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதாக தகவல் கிடைத்ததையடுத்து தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் வீட்டின் மேல் மாடியில் இருந்த ஒரு அறையும் அதிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்களும் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் கணவரை கைது செய்துள்ளனர்.