குடிநீர் போத்தல்களுக்கான விலை அதிகரிப்பு!
உள்நாட்டில் பொதியிடப்பட்ட மற்றும் PET போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
புதிய உத்தரவின்படி, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்வது, விற்பனைக்காக காட்சிப்படுத்துவது அல்லது வழங்குவது உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
புதிய அதிகபட்ச சில்லறை விலைகள்:
🔹 500 மில்லி லீற்றர் – 999 மில்லி லீற்றர் : ரூ. 80
🔹 1 லீற்றர் – 1.499 லீற்றர் : ரூ. 120
🔹 1.5 லீற்றர் – 1.999 லீற்றர் : ரூ. 150
🔹 2 லீற்றர் – 2.499 லீற்றர் : ரூ. 180
🔹 5 லீற்றர் – 6.999 லீற்றர் : ரூ. 400
இந்த உத்தரவுகளை மீறி அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
