2026 உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!


2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட விரும்புவோர் இணையவழி (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை நேற்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இம்மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளாகும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.