வத்தேகமவில் 4 வயது சிறுமியை வீதியில் கைவிட்ட சம்பவம்; தாயாரும் கள்ளக் காதலனும் கைது!
வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று, பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரும் மற்றுமொரு சந்தேகநபரும் ஹாலிஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (13) வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட நான்கு வயது சிறுமியை வத்தேகம பொலிஸார் மீட்டிருந்தனர்.
சிறுமியை தாக்கி, பின்னர் வீதியில் கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் அவரது தாயாரையும், அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நபரையும் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று (14) ஹாலிஎல – கெட்டவல வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
