O/L பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மாத்திரமே வழங்கப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!


2025 (2026) ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சை சான்றிதழ்கள் இணையவழியில் மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 

சான்றிதழ்களை பெறுவதற்காக பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரில் செல்ல வேண்டாம் எனவும் பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையவழியில் விண்ணப்பித்து சான்றிதழை தபால் மூலம் வீட்டிற்கு பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதற்காக https://certificate.doenets.lk/certificate என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.