புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிப்பு!


தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த பிரேரணையின் மூலம் இந்த விடயம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த சுரேஷ் சலே, இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

தனக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், உணவைத் தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.