இன்று முதல் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!


ஓராண்டுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி இன்று முதல் அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேனவின் தலைமையில், வெரஹாரவில் அமைந்துள்ள வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகன ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தில் இந்த நடவடிக்கை தொடங்கி வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முன்னாள் ஒப்பந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதைத் தொடர்ந்து, புதிய நிறுவனத்தைத் தேர்வு செய்யும் செயல்முறை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் இலக்கத் தகடுகள் தற்போது அச்சிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.