கொழும்பில் 6 இலட்சம் போலி அமெரிக்க டொலர்களுடன் நால்வர் கைது!
கொழும்பில் 6,00,000 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நால்வர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அவர்களிடமிருந்து 6 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நோட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி
