அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று ஆரம்பம்!
இந்தியாவின் அகமதாபாத் நகரத்திற்கும் இலங்கையின் கொழும்பிற்கும் இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று (19) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விமான இணைப்பின் மூலம், பயண நேரம் சுமார் எட்டு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
FitsAir நிறுவனம் இயக்கும் இந்த சேவை, அகமதாபாத் மற்றும் கொழும்பு நகரங்களை வாரத்திற்கு மூன்று முறை இணைக்கவுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் பயணத் தொடர்புகளை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக இந்த புதிய வழித்தடம் கருதப்படுகிறது. இதற்கு சின்னமன் ஹோட்டல்ஸ் மற்றும் வாக்கர்ஸ் டூர்ஸ் நிறுவனங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தொடக்க நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
இலங்கை சுற்றுலாத்துறைக்கு இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய மூலச் சந்தையாக இருந்து வருகிறது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தகவல்களின்படி, 2025ஆம் ஆண்டில் 531,000க்கும் அதிகமான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
-1.webp)