யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!
யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் யால தேசிய சரணாலயத்தின் “சுது வெலிமுல்ல” பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஃபாரி பயணத்திற்காக சென்ற இரண்டு ஜீப் வாகனங்களில் இருந்த குழுவினர், சரணாலய விதிகளை மீறி வாகனங்களில் இருந்து இறங்கி நடைபயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவர்கள் வனவிலங்கு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யால ஜீப் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்ததாவது, சரணாலய விதிகளை மீறும் ஜீப் சாரதிகள் அல்லது பயணிகள் மீது கைது நடவடிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட ஜீப் வாகனங்களுக்கு சஃபாரி சேவைத் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வாகனங்கள் மீது இதுவரை முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
