உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு போலிப் பணம் வழங்கிய 24 வயதுடைய இளைஞன் கைது!
கொலன்னாவையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், போலி 5,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று மாலை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொலன்னாவை பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளில், சந்தேகநபர் உள்ளூர் உணவகம் ஒன்றில் உணவு பெற்ற பின்னர் 5,000 ரூபாய் போலி நோட்டை வழங்கி பணம் செலுத்த முயன்றதாக தெரியவந்துள்ளது.
பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட உணவக உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கைது இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
