கோட்டாவின் ரிட்மனு இன்று விசாரணை: மனுவை விசாரணை செய்வதிலிருந்து விலகிய நீதியரசர்!


2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று (17) பிற்பகல் 1.30 மணிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்னிலையாகவுள்ளார்.

இன்று காலை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மனு தொடர்பான ஆவணங்கள் காலை 8.00 மணியளவில் மட்டுமே கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரதிவாதிகளிடமிருந்து மேலதிக அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், அமர்வில் இருந்த நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ, இந்த மனு விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.