தரமற்ற பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற பிளாஸ்டிக் பாத்திரங்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது கடுமையான சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இவ்வகை பிளாஸ்டிக் தயாரிப்புகளின் தொடர்ச்சியான பயன்பாடு பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் மற்றும் நீண்டகால ஆரோக்கியச் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பான உணவு சேமிப்பு, விநியோகம் மற்றும் கையாளுதல் நடைமுறைகளை ஊக்குவிப்பதுடன், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தரநிலைக்கு உட்பட்ட மற்றும் பாதுகாப்புச் சான்றளிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாத்திரங்களையே பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.