ஊடகவியலாளர்களுக்கு AI குறித்த பயிற்சி!


ஊடகத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறி ஒன்று நேற்று (11) மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பிலுள்ள ட்ரீம்ஸ் அக்கடமி நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நோர்வேயிலிருந்து வருகை தந்த மூத்த ஊடகவியலாளரும் AI தொழில்நுட்ப பயிற்றுவிப்பாளருமான என். சரவணன் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

இதன்போது, அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம் என்பதுடன், ஊடகப் பணிகளை எளிமைப்படுத்தவும் திறன் மிக்கதாக மாற்றவும் AI வழங்கும் வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், ஊடகத்துறையில் AI பயன்பாட்டின் நன்மைகள், சவால்கள் மற்றும் எதிர்காலப் பயன்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.