மீண்டும் எகிறிய தங்கத்தின் விலை!


இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 29 ஆம் திகதி 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண், இன்று 1,000 ரூபாய் அதிகரித்து 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 356,000 ரூபாயில் இருந்து 357,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தற்போதைய விலைகளின்படி,

🔸 24 கரட் தங்கம் – ஒரு கிராம்: 48,500 ரூபாய்
🔸 22 கரட் தங்கம் – ஒரு கிராம்: 44,625 ரூபாய்

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை, குறிப்பாக திருமணங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளுக்காக நகைகள் வாங்கத் திட்டமிடும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.