ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நிறுத்திவிடக் கூடாது - அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை!


கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிடக் கூடாது என அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராயர் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கும் சீர்குலைப்பதற்கும் பல்வேறு தரப்பினர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் இந்த விசாரணைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டால், அது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.