முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி போராட்டம்!


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டுக்காக போராடிய சுரேஷ் சலேவை சிறைப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் பயங்கரவாதியைப் போன்று செயற்படுகின்றனர் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.