குடும்பத் தகராறில் மனைவி படுகொலை ; கைது செய்யப்பட்ட கணவரும் மரணம்!
குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு சோகமான முடிவை எட்டியுள்ளது.
நேற்று (10) காலை தம்பதியினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், 59 வயதுடைய கணவர் தனது 61 வயதுடைய மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவர் பிங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதிலும், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
