பொசன் தானசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானசாலைகள் மற்றும் தோரணங்களை ஏற்பாடு செய்யும் போது, குறித்த பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு முன்கூட்டியே அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை விபத்துகளைக் குறைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தானசாலைகள் மற்றும் தோரணங்களை நடத்துபவர்கள் வாகன நிறுத்தம் உள்ளிட்ட தேவையான வழிகாட்டுதல்களை பொலிஸாருடன் ஒருங்கிணைந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வீதி விபத்துகளை 24 மணித்தியாலங்களுக்குள் பொலிஸாருக்கு அறிவிக்காத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.