ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது!


கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்ப விசாரணைகளில், குறித்த நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவரும், அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவருமாவார்.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.