பிணையில் வந்த சொல்லிசைப் பாடகருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து!


கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதனை வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ச, இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், இளம் கலைஞர் சங்கீத்சன் விடுதலை செய்யப்பட்டு தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்திருப்பதே முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அது நிகழ்ந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இளம் கலைஞர் தனது தனித்துவமான திறமையையும் எதிர்கால இலக்குகளையும் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள வழியில் தொடர்ந்து முன்னெடுப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பாடகரின் எதிர்கால கலைப் பயணத்திற்கும் தனது வாழ்த்துகளை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.