தலவத்துகொட உணவக தீ விபத்து - காயமடைந்த மூவரும் உயிரிழப்பு!
தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
